அஜித்துக்கு என்ன ஆச்சு? வாய் திறக்காத சுரேஷ் சந்திரா… உண்மையை உடைத்த பிரபலம்..

1
அஜித்துக்கு என்ன ஆச்சு? வாய் திறக்காத சுரேஷ் சந்திரா… உண்மையை உடைத்த பிரபலம்.. - Dinamani news

Ajithkumar: நடிகர் அஜித்குமார் மூளையில் ஆபிரேஷன் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியது. இதை தொடர்ந்து பலரும் என்ன நடக்கிறது என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிஆர்ஓ ரமேஷ் பாலா முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பின் மீது இருந்தே அதே ஆர்வம் ரேஸ் ஓட்டுவதிலும் இருந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டு இருக்கிறது. 16க்கும் அதிகமான ஆபரேஷன்கள் அவர் முதுகுத்தண்டிலே செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினி ரசிகர்களை கிளப்பிவிட்ட வேட்டையன் பட நடிகர்!.. கொஞ்சம் சும்மா இருங்க பாஸ்!…

இந்நிலையில் நேற்று அஜித் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது அவரின் வழக்கமான செக்கப் தான் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இரவில் இருந்து அஜித்துக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதற்கான ஆபிரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.

இதையும் படிங்க: 10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…

இதை தொடர்ந்து, பிஆர்ஓ ரமேஷ்பாலா கூறுகையில், வழக்கமான சிகிச்சைக்காக அப்போலோ சென்ற அஜித்துக்கு நரம்பு மற்றும் இதய சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. ரசிகர்களும், நலவிரும்பிகளும் அவர் ஆரோக்கியம் குறித்து கவலைக்கொள்ள வேண்டாம். அஜித் நல்லா தான் இருக்கிறார் என்றார்.

அஜித்துக்கு என்ன ஆச்சு? வாய் திறக்காத சுரேஷ் சந்திரா… உண்மையை உடைத்த பிரபலம்.. - Tamil Breaking News 24x7

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே கவலையில் இருக்கும் அஜித் ரசிகர்கள் சுரேஷ் சந்திராவை டேக் செய்து இப்பையாது வாயை திறங்கள். மத்த விஷயமுனா பரவாயில்லை. இப்படி ஒரு சென்சிட்டிவ் விஷயத்துக்கு எதுவும் சொல்லாமல் இருப்பது சரியா எனக் கடுப்படித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here