அண்ணனை கழுத்தறுத்து கொலை செய்த தம்பி – Right this moment Jaffna Information

3
அண்ணனை கழுத்தறுத்து கொலை செய்த தம்பி - Right this moment Jaffna Information - Tamil Breaking News 24x7

வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (30) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடாகம, அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

இறந்தவர் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ​​அவரது தம்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் கூரிய ஆயுதத்தால் தனது மூத்த சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here