அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

1
அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! - Dinamani news

Andrea Jeremiah நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரையில்,  தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும், படமும் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். கதைக்கு எப்படி பட்ட காட்சிகள் தேவைப்பட்டாலும் கூட அவர் அந்த கதைக்காக நடித்து விடுவார் என்று கூட கூறலாம். இது அவர் முன்னதாக நடித்த படங்களை வைத்து பார்த்தாலே தெரியும்.

learn more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு வந்த சோதனை!

இருப்பினும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். கடைசியாக தமிழில் அவருக்கு அனல் மேல் பனித்துளி திரைப்படம் தான் வெளியாகி இருந்தது. அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே சொல்லவேண்டும்.

READ MORE-நம்பி ஏமாந்துட்டேன்! ‘வாழ்க்கை போச்சு’… நடிகை கிரண் வேதனை!

அந்த படத்திற்கு பிறகு ஆண்ட்ரியாவுக்கு தமிழில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. எனவே, ரசிகர்கள் அனைவரும் ஆண்ட்ரியா நடித்த படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவின் திரைப்படம் தமிழில் வெளியாகவுள்ளது. அவர் தற்போது கா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

learn more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

இந்த திரைப்படத்தை இயக்குனர் நாஞ்சில் என்பவர் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடுகாட்டிற்குள் இரவு நேரங்களில் படங்களில் நடிப்பதற்கு என்றால் தனி தைரியம் வேண்டும். ஆண்ட்ரியா இப்படி நடித்துள்ள தகவலை அறிந்த ரசிகர்கள் உங்களுக்கு செம தில்லு மேடம் என அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The submit அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here