அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு.!!

6
அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளரிப்பழ விற்பனை மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு.!! - Dinamani news

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதை காண முடிந்தது.

குறிப்பாக கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப் பழத்திற்க்கு சிறந்த கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், 300 ரூபாய் முதல் சுமார் 1000 ரூபாய் வரை இவ் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வகை பழம் பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக விளைச்சலாகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பெருமளவில் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன், ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.

இதே வேளை கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதிகளில் இளநீர், தோடை, குளிர்பானம் செய்யும் விற்பனை நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திகளிற்காக பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு.!! - Dinamani news அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு.!! - Dinamani news அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு.!! - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here