இதுக்கு நீங்க போஸ்டரே விட்ருக்கலாம் வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட்டில் கோட்டை விட்டுட்டாரே!..

3
இதுக்கு நீங்க போஸ்டரே விட்ருக்கலாம் வெங்கட் பிரபு!.. கோட் அப்டேட்டில் கோட்டை விட்டுட்டாரே!.. - Dinamani news

கோட் படத்தின் அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். மார்ச் மாதமே படப்பிடிப்பு முடியும் என தகவல்கள் வெளியான நிலையில், மே அல்லது ஜூன் மாதமே படம் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால், கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த படத்தின் மொத்த சிஜி வேலையும் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற போகிறது. இப்போதைக்கு அப்டேட் விடுவது ரொம்பவே சீக்கிரம் என வெங்கட் பிரபு பேசி பகீர் கிளப்பி உள்ளார்.

இதையும் படிங்க: அடுத்த தளபதி நான் தான்!.. 70 லட்சம் பேர் என் பாக்கெட்டுல!.. கெத்துக்காட்டிய சிவகார்த்திகேயன்!..

இந்த ஆண்டு தீபாவளிக்குத் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வெளியாகும் என்கின்றனர். சிஜி காட்சிகள் முழுமையாக நிறைவடைந்தால் தான் படம் வெளியாகும் என்கின்றனர். தீபாவளிக்குள் எதிர்பார்த்த அளவுக்கு ரெடியாகவில்லை என்றால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகவும் வாய்ப்புகள் இருப்பதால் தான் அப்டேட்களை விடாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், கோட் படத்தின் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், அர்ச்சனா கல்பாத்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரை தொடர்ந்து வெங்கட் பிரபு வாழ்த்து சொல்லும் போது படத்தில் ஹீரோயின் பெயர் ஸ்ரீனிதி என்கிற அப்டேட்டையும் மட்டும் சாதாரணமாக லீக் செய்து விட்டார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: ஸ்பைடர்மேன் படத்துல நடிக்கப்போறாரா ஜோதிகா?.. என்னம்மா தாவுறாரு!.. வேறலெவல்ங்க நீங்க!..

இதற்கு தளபதி விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி இருக்கும் ஒரு போஸ்டரையாவது வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கலாம் என வெங்கட் பிரபுவை விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here