இது சினிமாவுக்கு ஏத்த மூஞ்சியா? எங்க உருப்பட போகுது.. ஜெயலலிதாவின் முகத்துக்கு நேராக கூறிய இயக்குனர்

1
jaya

Actress Jayalalitha: சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்தான் செல்வி ஜெயலலிதா. மைசூரில் 1948 ஆம் ஆண்டு பிறந்த ஜெயலலிதாவிற்கு ஒரே ஒரு அண்ணன். ஜெயலலிதா இரண்டு வயதில் இருக்கும் போதே அவருடைய தந்தை இறந்து போக தாய் சந்தியா குடும்பத்தை காக்க சினிமாவிற்கு வருகிறார். பல படங்களில் ஹீரோயினாக நடித்த சந்தியா ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு தன் மகளான ஜெயலலிதாவை அழைத்து செல்கிறார்.

ஏற்கனவே அந்தப் படத்தில் ஒரு குழந்தையும் நடித்துக் கொண்டிருக்க ஆனால் அந்த குழந்தைக்கு நடிப்பே வரவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் படம் தணிக்கைக் குழுவுக்கு செல்ல இருந்த நிலையில் எப்படியாவது ஒரு குழந்தையை நடிக்க வைக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் படக்குழு இருக்க அப்போது சந்தியாவுடன் வந்த ஜெயலலிதாவை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் உற்று நோக்குகிறார்.

இதையும் படிங்க: ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

உடனே அந்தப் படத்தில் ஜெயலலிதாவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்குகிறார். அது ஒரு கன்னட திரைப்படம். இதிலிருந்து ஜெயலலிதா கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைகிறார். அதிலிருந்தே ஜெயலலிதா பல படங்களில் நடித்து வர ஜெயலலிதாவின் அம்மா சந்தியா சென்னையை நோக்கி புறப்படுகிறார். அந்த நேரத்தில் ஒய்.ஜி. மகேந்திரனின் அப்பாவான ஒய்.ஜி.பார்த்தசாரதியுடன் சந்தியாவுக்கு நட்பு ஏற்படுகிறது.

ஏற்கனவே பார்த்தசாரதி நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர். இந்த நாடகத்தில் சந்தியாவும் தன்னை இணைத்துக் கொள்கிறார். சந்தியாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவும் பல நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் பின்னாளில் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராக இருந்த நடிகர் சோவை இந்த நாடகக் குழுவில்தான் முதன் முதலில் பார்க்கும் சந்தர்ப்பம் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..

அதிலிருந்தே சோவுடன் இணைந்து பல நாடகங்களில் ஜெயலலிதா நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவிக்கு சங்கர் கிரி என்பவருடன் நட்பு ஏற்பட அவர் ஒரு ஆங்கில திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டாராம். அந்த ஆங்கில படத்தில் ஜெயலலிதாவை நடிக்க வைத்திருக்கிறார் சங்கர் கிரி. இப்படி பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயலலிதா.

ஆனால் அவருடைய பட வரிசையில் இப்படி சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஜெயலலிதாவிற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்தப் படத்தை ஆதித்ய சுப்பாராவ் என்பவர் இயக்கினாராம்.இந்தப் படத்தின் டெஸ்டுக்காக ஜெயலலிதா போக இயக்குனர் ஆதித்யசுப்பாராவ் ஜெயலலிதாவின் முகத்தை பார்த்து சினிமாவிற்கு ஏற்ற முகவட்டு இல்லை இவருக்கு என்றும் இவரால் சினிமா நடிகையாக பிரகாசிக்க முடியாது என்றும் கூறினாராம்.

இதையும் படிங்க: மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..

இந்த சம்பவம் ஜெயலலிதாவை மிகவும் பாதித்திருக்கிறது. இதன் காரணமாகவே படங்களில் நடிக்க மறுத்தாராம். ஆனால் பி.ஆர்.பந்த்லு இந்த விஷயம் கேள்விப்பட்டு ‘என்ன ஒரு மங்கலமான முகம். என் படத்திற்கு எந்த டெஸ்டும் வேண்டாம்’ என கூறி அவருடைய ஒரு கன்னட படத்திற்கு ஹீரோயினாக நடிக்க வைத்தாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here