இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க

4
இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க - Dinamani news - இன்சுலின்,  இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க
இன்சுலின் என்பது உணவிலிருந்து கிடைக்கக்கூடிய குளுக்கோஸை உடல் செல்களுக்கு ஆற்றலாக மாற்ற உதவுகிறது. அப்படி இன்சுலீன் பற்றாக்குறையால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோயாக மாறுகிறது.

இன்சுலீன் தட்டுப்பாடு என்பது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாகும். அதாவது உங்கள் உடல் இன்சுலின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்வதை தடை செய்யும்.

இந்த இன்சுலீன் என்பது உணவிலிருந்து கிடைக்கக்கூடிய குளுக்கோஸை உடல் செல்களுக்கு ஆற்றலாக மாற்ற உதவுகிறது. அப்படி இன்சுலின் பற்றாக்குறையால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோயாக மாறுகிறது.

இது நீரிழிவு நோயை மட்டுமல்லாமல் உடல் பருமன், இதய நோய் , பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. எனவே இப்படி இன்சுலீன் தட்டுப்பாட்டை தவிர்க்க நீரிழிவு நோயாளிகளுக்கு செயற்கை முறையில் இன்சுலின் ட்ரிகர் அல்லது மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

உணவின் மூலமும் இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்கலாம். அப்படி எளிமையான முறையில் இன்சுலீன் ஹார்மோனை அதிகரிக்க 6 உணவுகளை பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா. அவை என்னென்ன பார்க்கலாம்.

இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க - Dinamani news - இன்சுலின்,  இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க

தேங்காய் துண்டு :

தேங்காய் துண்டுகள் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதாவது சில ஆய்வுகள் கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் இன்சுலின் தட்டுப்பாட்டை சரி செய்ய உதவுவதாக நிரூபித்துள்ளன. அந்த வகையில் தேங்காய் உதவியாக இருக்கும். அதோடு அது நார்ச்சத்து நிறைந்தது.

கார்போஹைட்ரேட்டை குறைவாக உள்ளடக்கியது. அதோடு இயற்கையான நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டுள்ளது. எனவே தேங்காய் உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. எனவே இதை அவ்வப்போது போர் அடிக்கும்போது ஒரு துண்டு சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடும் உணவிலும் தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

முளைக்கட்டிய பயறு :

இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க - Dinamani news - இன்சுலின்,  இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க

முளைக்கட்டிய பயறு வகைகளில் ஊட்டச்சத்து அளவு அதிகமாக உள்ளது. அதோடு அதன் மாவுச்சத்து புரத்தச்சத்து நிறைந்தது என்பதால் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியாக செயலாற்றுகிறது.

அதோடு இது சூப்பர் ஃபுட் உணவுகளில் இடம் பெற்றவை என்பதால் உடலுக்கு எண்ணற்ற வகையில் நன்மை அளிக்கக் கூடியது. அதேசமயம் இன்சுலின் தட்டுப்பாட்டையும் துரிதப்படுத்துகிறது. எனவே முளைக்கட்டிய பயறு வகைகளை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம்.

தயிருடன் ஆளி விதை :

தயிர் உடல் ஆற்றலுக்கு சிறந்த உணவு. ஆய்வுகளில் தயிரானது புரோயயோடிக் உணவாக இருப்பதால் இன்சுலீன் தட்டுப்பாட்டை சீராக்கி இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே தயிரை வெறுமனே சாப்பிடுவதை விட ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா கூறுவதுபோல் ஆளி விதையுட சேர்த்து சாப்பிடுவது ஒமேகா 3 ஃபேட்டி அமிலத்தை அளிக்கிறது. இதனால் இன்சுலினை தூண்டுவதில் இவை இரண்டும் நல்ல கலவையாக செயல்படும்.

சியா விதை புட்டிங் :

இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க - Dinamani news - இன்சுலின்,  இன்சுலின் தட்டுப்பாட்டை தவிர்க்க

ஆளி விதையை போன்றே சியா விதையும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அந்த வகையில் இன்சுலின் தட்டுப்பாட்டையும் சீராக்கும். இதில் அதிகமான நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் குளுக்கோஸ் அளவை குறைத்து சமன் செய்கிறது.

இதை புட்டிங் போல் செய்து சாப்பிடும்போது சர்க்கரை சேர்க்கக் கூடாது. செயற்கை இனிப்பு சுவை எதையும் சேர்க்கக் கூடாது. பின் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்.

அவகேடோ மற்றும் கேரட் :

அவகேடோ நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் இன்சுலீன் தட்டுப்பாட்டு சிறந்த தீர்வாக இருக்கும். கேரட் கிளைசெமிக் குறியீடு கொண்டது என்பதால் இவை இரண்டையும் கலந்து சாலட் போல் சாப்பிட இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

ரைஸ் கிராக்கர்ஸ் மற்றும் பாதாம் பட்டர் :

Rice Crackers என்பது கொரிய மற்றும் ஜப்பான் உணவுகளில் பிரபலமானது. தற்போது இங்கும் சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கின்றன.

அரிசியால் செய்யப்படும் இது கிளைசெமிக் குறியீடு கொண்டது என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர். எனவே இதை மிதமான அளவு பாதாம் பட்டருடன் சேர்த்து சாப்பிட இன்சுலீன் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here