Home battinews இன்றைய ராசிபலன்கள் – 22.10.2023

இன்றைய ராசிபலன்கள் – 22.10.2023

44

இன்றைய பஞ்சாங்கம்

22-10-2023, ஐப்பசி 05, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.59 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.44 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். மஹாஷ்டமி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிபலன்கள் – 22.10.2023

மேஷம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பூர்வீக சொத்துக்களால் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன், ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது, வீண் பேச்சுக்களை குறைப்பது நல்லது.

கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு ß சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.

கன்னி

இன்று எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

துலாம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

தனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

மகரம்

இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

கும்பம்

இன்று உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்களில் இழுபறி நிலை நிடிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

Previous articleபொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
Next articleCandlebook Island Recreation Evaluate | Freeappsforme