இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்தவர் கைதானார்

11
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்தவர் கைதானார் - Dinamani news - போதை மாத்திரைகளை

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here