இலங்கைத் தமிழ் மருத்துவரின் வித்தியாசமான சிகிச்சைமுறை

2
இலங்கைத் தமிழ் மருத்துவரின் வித்தியாசமான சிகிச்சைமுறை - Dinamani news

கனடாவில், இலங்கைத் தமிழரான மருத்துவர் ஒருவர், இசை வாயிலாக சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் முயற்சியில் இறங்கியுள்ளதுடன், அதில் அவர் வெற்றியும் அடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கனடாவின் Scarboroughஇல் மருத்துவராகப் பணியாற்றும் ரெஜின் ராஜேந்திரம் (Regine Rajendram) என்னும் இலங்கைத் தமிழர், சிறுவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருகிறார்.

ரெஜின் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த ராப் இசைக்கலைஞரும்கூட. ஆட்டிஸம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக பாடல்களை வெளியிட்டு வருவதுடன், தனது இசைத் தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் அவர்களுடைய சிகிச்சைக்காக ரெஜின் பயன்படுத்தி வருகிறார்.

இந்த ஆண்டிலும், ஆட்டிஸம் பாதித்த சிறுவர்களுக்காக தனது இசைத்தொகுப்புகள் மூலம் ஒரு மில்லியன் டொலர்கள் திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாக ரெஜின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here