இளையராஜாவின் ரசிகர் என்பதையும் தாண்டி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? பயோபிக்கில் தனுஷ் நடிக்க இதுதான் காரணமா

2
இளையராஜாவின் ரசிகர் என்பதையும் தாண்டி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? பயோபிக்கில் தனுஷ் நடிக்க இதுதான் காரணமா - Dinamani news

Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக தனுஷ் தேர்ந்தெடுக்கும் கதைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காதல் , டூயட் என பெரும்பாலும் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து வந்த தனுஷ் இப்போது வரலாற்று பின்னனியில் அமைந்த கதை, சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்து சொல்வது மாதிரியான கதைகளில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றிருக்கிறார்.

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கேப்டன் மில்லர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு வழக்கம் போல பிரமிக்க வைத்தது. இப்போது அவரே ஒரு படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார். இது அவருக்கு 50வது படமாகும். இந்த நிலையில் தனுஷ் அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: 10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…

அந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜாவின் மீது அதிக அன்பு கொண்டவர் தனுஷ். சொல்லப்போனால் இளையராஜாவின் தீவிர ரசிகர். அதனால் இந்த பயோபிக்கில் நடிக்கிறார் என்பதுதான் நமக்கு தெரியும். ஆனால் உண்மையிலேயே இளையராஜாவிற்கு நன்றிக்கடனை செலுத்துவதற்காகத்தான் தனுஷ் இந்த பயோபிக்கில் நடிப்பதாக பத்திரிக்கையாளர் சுபேர் கூறினார்.

அதாவது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா முதன் முதலில் இயக்கிய படம் என் ராசாவின் மனசிலே. அதற்கு முன்பாகவே ராஜ்கிரணுக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஆழமான நட்பு இருந்து வந்ததாம். அந்தப் படத்தை ராஜ்கிரண்தான் தயாரித்திருந்தார். அதனால் இளையராஜாவிடம் ராஜ்கிரண் ‘ நான் ஒரு படத்தை எடுக்க போகிறேன். அதில் நான் தான் ஹீரோ’ என்று சொல்ல இளையராஜாவுக்கு ஒரே ஷாக்.

இதையும் படிங்க: பாக்கியாவை காலி செஞ்சிட்டாரே கோபி… முத டைமா ஜெயிச்சுடுவாரு போலையே…

தேவையில்லாமல் படத்தை தயாரித்து பணத்தை விட்டுவிடாதே என்று அறிவுரையெல்லாம் செய்திருக்கிறார். எனினும் ராஜ்கிரண் அவர் முடிவில் உறுதியாக இருக்க ‘சரி முதலில் படத்தை எடுத்துக் கொண்டு வா. அதன் பிறகு இசை போட்டு தருகிறேன்’ என இளையராஜா சொல்லியிருக்கிறார். சொன்னப்படியே படத்தை முழுவதும் எடுத்துவிட்டு அதை இளையராஜாவும் பார்த்து பிரமித்து போனாராம்.

படம் நன்றாக வந்திருக்கிறது என கூறி அதற்கேற்ப இசை, ரீ ரிக்கார்டிங் எல்லாம் போட்டுக் கொடுக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படத்திற்கு பிறகுதான் கஸ்தூரி ராஜாவுக்கும் பல நல்ல படங்களை இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதனால் தன் அப்பாவின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த இரு நபர்கள். ஒன்று ராஜ்கிரண். மற்றொருவர் இளையராஜா. தன்னுடைய பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரணை நடிக்க வைத்து அந்த நன்றிக்கடனை அடைத்தார் தனுஷ். இப்போது இளையராஜாவுக்கு நன்றிக்கடனை அடைக்கத்தான் பயோபிக்கில் நடிப்பதாக சுபேர் கூறினார்.

இதையும் படிங்க: ஒரே ஜாலி மூடு தான் போல!.. விடாமுயற்சி ஹீரோயின் ஜாலியா எப்படி போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here