உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது.

2
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. - Dinamani news

சென்னை: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் செ.உமாசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDIl’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. புத்தாக்க கண்டுபிடிப்புக்கள் Innovation.tn.gov.in இணையதளம் வழியாக பெறப்படுகின்றன.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தினை, (Entrepreneurship Improvement and Innovation Institute EDII-TN) தமிழ்நாட்டில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு 2001ல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் நிறுவியது. இந்நிறுவனம்
செயல்படுவதற்கான நிதிகளையும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சிந்தனைகளை பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் உருவாக்குதற்காக EDII TN நிறுவனம் ஆண்டுதோரும் உயர்கல்வி மாணவர்களுக்கு இ.டி.ஐ.ஐ ஹேக்கத்தான் போட்டிகளை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில், அவர்கள் படிக்கிற காலத்திலேயே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைதல் சிந்தனையினை தூண்டும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில் சந்தைப்படுத்தக்கூடிய புதிய பொருட்களின் மாதிரிகளை உருவாக்க வேண்டும். (The scholars must generate revolutionary concepts & convert their concepts into marketable product prototypes) இவ்வாறு உருவாக்கப்படும் சிறந்த மாதிரிப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் உயர்கல்வி மாணவர்களுக்கு 25 முதல் பரிசுகள், தலா ரூபாய் 1 லட்சம் என அரசு வழங்கி வருகிறது. இதுவரையில் 136 மாணவர் அணிகளுக்கு 1.14 கோடி ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகள். வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக்கல்லூரிகள் மீன்வளக்கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் (polytechnics) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் (ITIs), போன்ற 1,700-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் 3.20 லட்சம் மாணவர்கள் இந்தப் போட்டிக்குப் பயிற்சி பெற்று பங்கு பெற்று வருகின்றனர்.

பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் (இது மாறுதலுக்கு உட்பட்டது இன்னும் அதிக மாணவர்களுக்கு பரிசு தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது). முதல் பரிசு – முதல் 20 அணிகளுக்கு தலா ரூ.1 லட்சம்.
2வது பரிசு 60 அணிகளுக்கு தலா ரூ.25000 ஒவ்வொரு நிலையிலும் மாணவர்களுக்கு பங்கேற்பாளர்கள் சான்று, பாராட்டுச்சான்று, மாணவ வழிகாட்டிகளுக்கு சான்றுகள், வழிநடத்துனர்களுக்கு சான்றுகள், சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு சான்றுகள் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான மாணவர்கள் கண்டுபிடிப்புக்கள் Innovation.tn.gov.in/ இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புத்தாக்க சிந்தனைகளைப் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20.03.2024 மாலை 5.00 மணியாகும். எனவே உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்க விரும்பினால் உங்களது கல்லூரி நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு தாமதமில்லாமல் மாணவ வழிநடத்துனர்கள் வழியாகப் புத்தாக்க சிந்தனைகளை (Progressive concepts) பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறது

The put up உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான EDII’s ஹேக்கத்தான்-2023-24, நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. appeared first on Dinakaran.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here