எங்களுக்கு டைவர்ஸா?.. சிம்பிளா போட்டோ போட்டு முடிச்சி விட்ட நயன்தாரா.. குடும்பத்துடன் ஜாலி டூர்!..

1
எங்களுக்கு டைவர்ஸா?.. சிம்பிளா போட்டோ போட்டு முடிச்சி விட்ட நயன்தாரா.. குடும்பத்துடன் ஜாலி டூர்!.. - Dinamani news

நடிகை நயன்தாரா நேற்று இன்ஸ்டாகிராமில் எதுவும் குறிப்பிடாமல் “நான் தோத்துட்டேன்” என பதிவிட்ட இன்ஸ்டா ரீல்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். இருவரும் படு நெருக்கமான உறவில் இருந்தனர். ஆனால், சிம்புவுடன் செட் ஆகாத நிலையில் அவரை விட்டு விலகினார் நயன்தாரா.

எங்களுக்கு டைவர்ஸா?.. சிம்பிளா போட்டோ போட்டு முடிச்சி விட்ட நயன்தாரா.. குடும்பத்துடன் ஜாலி டூர்!.. - Tamil Breaking News 24x7

இதையும் படிங்க: இது சினிமாவுக்கு ஏத்த மூஞ்சியா? எங்க உருப்பட போகுது.. ஜெயலலிதாவின் முகத்துக்கு நேராக கூறிய இயக்குனர்

அடுத்து விஜய்யின் வில்லு படத்தின் சூட்டிங்கின் போது அந்தப் படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் நெருக்கமானார். தனது கையில் பிரபுதேவாவின் பெயரை எல்லாம் பச்சை குத்திக்கொண்டு திருமணம் வரை சென்றுவிட்டார். ஆனால், கடைசியில் பிரபுதேவாவை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த நயன்தாரா அந்த படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: முதுகு தண்டுல பிரச்சனைன்னு சொன்னாங்க!.. இப்போ மூளையில பாதிப்பா?.. ஐசியூவில் இருக்கிறாரா அஜித்?

திருமணத்துக்குப் பிறகு நடிகை நயன்தாரா நடித்தது வரும் பல படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாராவுக்கு ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐசி எனும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். நயன்தாரா மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இதையும் படிங்க: படுத்தேவிட்டானய்யா!.. இனிமே அஜித்தை நம்பி பிரயோஜனம் இல்லை.. லைகாவுல நீங்களும் படம் பண்ணலாமாம்!..

இதற்கிடையே நயன்தாரா திடீரென விக்னேஷ் சிவனை அன் ஃபாலோ செய்துவிட்டார் என்றும் அவர் இன்ஸ்டாவில் “ நான் தோத்துட்டேன்” என பதிவிட்டது நயன்தாரா விக்னேஷ் சிவனை பிரிய போகிறாரா என்கிற கேள்விகளை எழுப்பின.

ஆனால், அதெல்லாம் சும்மா வதந்தி என்பதை குறிப்பிடும் விதமாக குடும்பத்துடன் விமானத்தில் சம்மர் டூர் கிளம்பிய புகைப்படத்தை நயன்தாரா தற்போது வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here