ஒருவரை கடத்தி சென்று கப்பம்-ஐவருக்கு நேர்ந்த கதி..!

213

ஒருவரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் 5 சந்தேக நபர்கள் (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த 22 முதல் 62 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

அலவத்துகொடை, அக்குறணை பிரதேசத்தில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த நபரை கடத்திச் சென்று அவரை தாக்கி பலாத்காரமாக 20 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here