கனடாவில் தனது பெற்றோரை கொன்ற மகன்! – At present Jaffna Information

3
கனடாவில் தனது பெற்றோரை கொன்ற மகன்! - At present Jaffna Information - Tamil Breaking News 24x7

கனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மரணங்களுடனும் உயிரிழந்தவர்களின் மகனுக்கு தொடர்பு உண்டு என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

43 வயதான சீன் ஓவன்ஸ் என்ற நபரை நயகரா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேரி ஓவன்ஸ் மற்றும் ஹரோல்ட் ஓவன்ஸ் ஆகிய இருவரையும் இந்த நபர் படுகொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்தப் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பிலான ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here