கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்! – As we speak Jaffna Information

3
கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்! - As we speak Jaffna Information - Tamil Breaking News 24x7

கனடாவில் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு( தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவோம்.

பாடசாலைக்கு வரும் ஒரு மாணவர், எனக்கு பசிக்கிறது என்று கூறுமானால், பாடசாலை என்னும் சமுதாயம் மற்றும் நாடு என்னும் முறையில், நாம் எல்லோரும் செய்யவேண்டிய வேலை இன்னமும் நிறைய இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

400,000 மாணவர்களுக்கு

அதன்படி, எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து கனடா பாடசாலைகளில் கூடுதலாக 400,000 மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு வழங்க, கனடா பெடரல் அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நேற்றையதினம்(2) இது குறித்த அறிவிப்பை பிரதமர் ட்ரூடோவும், நிதியமைச்சர் Chrystia Freeland வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here