கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.!

1
கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.! - Dinamani news

NTK –  சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் முதல் தேர்தல் அரசியலில் பங்கு பெற்று வருகிறது. அந்த தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, அடுத்தடுத்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது.

Learn Extra – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!

இந்த வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா எனும் கட்சிக்கு முன்னுரிமை அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்னர்.

இதனால், நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். தேர்தல் ஆணையமானது, முன்னுரிமை அடிப்படியில், அவர்கள் முதலில் கேட்டதால் நாங்கள் கரும்பு விவசாயி சின்னத்தை அவர்களிடம் கொடுத்தோம் என விளக்கம் அளித்தனர்.

Learn Extra – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

இதனை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் நாம் தமிழர் கட்சியினர். அப்போது தேர்தல் ஆணையம் மீண்டும் அதே முன்னுரிமை அடிப்படையில் சின்னம் கொடுக்கப்பட்டதை கூறியது. இதனை அடுத்து தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

இதனை அடுத்து, டெல்லி உச்சநீதிமன்றத்தை தற்போது நாம் தமிழர் கட்சி அணுகியுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சி 2019 முதல் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் வைத்துள்ளோம் என கூறி தங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி முறையிட்டுள்ளது.

Learn Extra – மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில் , நங்கள் தற்போது 7 சதவீத வாக்கு வங்கி வைத்து இருக்கிறோம். வாக்கு வங்கியை குறைக்கவே இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவ வருகிறது என கூறி தனது  அதிருப்தியை பதிவு செய்தார்.

The submit கரும்பு விவசாயி தான் வேணும்.. உச்சநீதிமன்றம் சென்ற நாம் தமிழர்.! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here