கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்!{படங்கள்}

161

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

 

இந்திய இழுவைப் படகுகள் தொடர்ச்சியாக எல்லை மீறி வந்து இலங்கை மீனவர்களது வளங்களை அழித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு சென்று கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

 

இலங்கை மீனவர்கள் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதால், மீனவர்களது பாதுகாப்பு கருதி ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதி சீட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

20240303 090106 20240303 090130 20240303 090215 20240303 090044

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here