காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.!

1
காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.! - Dinamani news

Annamalai – மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்து வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Learn Extra – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு!

தேர்தல் நெருங்குவதால் பல்வேறு கட்சியினரும் தங்கள் தேர்தல் வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் உள்ள நிலவரம் என்ன என்பதை ஆய்வு செய்து அதனை அறிக்கையாக தயார் செய்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை அளிக்க உள்ளார்.

Learn Extra – திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது.! தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.!

இதற்காக இன்று டெல்லி செல்லும் முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் 39 தொகுதிகளிலும் உள்ள நிலவரத்தை தலைமையிடம் எடுத்து கூறுவோம். பாஜக தேசிய தலைமை தான் இதனை முடிவு செய்வார்கள் என கூறினார்.

மேலும், எங்கள் வேலை, தொண்டர்கள் சொல்வதை தலைமையிடம் கொண்டு செல்வது மட்டுமே.  39 தொகுதிகளிலும் வேட்பாளர் விருப்ப பட்டியலை தயார் செய்துள்ளளோம். ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 60 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் 43 பேர், மத்திய சென்னையில் 34 பேர், சேலத்தில் 51 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் என கூறினார்.

Learn Extra – பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.

யார் பெயரையும் நான் வெளியிட விரும்பவில்லை. பெண் விருப்ப வேட்பாளர்கள் விருப்ப பட்டியல் இங்கு அதிகமாக இருக்கிறது. யார் யார் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என இன்று பாஜக தலைமை உரிய முடிவு எடுக்கும். சில இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்பார்கள். யார் கூட்டணி என்ற விவரத்தையும் நான் கூற விரும்பவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The publish காஞ்சிபுரம் 43, ம.சென்னை 34, சேலம் 51… தமிழக பாஜகவில் படையெடுக்கும் வேட்பாளர்கள்.! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here