குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை

31
Dinamani news குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயதுடைய மகள் மற்றும் மகனைக் கொன்றதுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரனாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் அம்பேகொட கொதிகமுவவில் உள்ள பழமையான அம்பளத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. நள்ளிரவில் அல்லது அதிகாலையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் பலர் திரண்டு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர்.

அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே குழந்தைகளின் தாய் வீடும் உள்ளது.

33 வயதுடைய தந்தை அம்பலத்தின் பிரதான கற்றையில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளும் தந்தையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

தந்தை தூக்கில் தொங்கிய கயிற்றின் அருகே மேலும் இரண்டு கயிறுகள் உள்ளன , இறந்த மகளின் கால் அருகே ஒரு கயிறு காணப்பட்டது. குழந்தைகளின் காலணிகளும் தந்தையின் காலணிகளும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததோடு, குழந்தைகளின் தந்தை இறந்த இடத்தில் கையடக்கத் தொலைபேசியும் கான்கிரீட் பலகையில் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

Dinamani news குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை

சம்பவம் தொடர்பான தகவல் அரநாயக்க பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அரநாயக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ராகுல கந்தேவத்த உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குழந்தைகளின் தாயின் தந்தை 61 வயதான நிமல் விமலசூரிய,

“இவர் எனது மருமகன், மருமகனின் தாயாரின் வீடு கிரியுல்லவில் உள்ளது. அரநாயக்க கொடிகமுவவிலுள்ள எங்கள் வீட்டில் இருந்து பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று வந்த நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் மருமகன், குழந்தைகளை மற்றும் மகளை அழைத்துக்கொண்டு கிரியுல்ல சென்று விட்டார்.

அங்கு இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது , வாளை எடுத்து என்னை கொல்ல துரத்தி வருகிறார் என எனது மகள் எங்களிடம் அழைப்பெடுத்து தெரிவித்தார். எனது மகளின் பேச்சைக் கேட்டதும் முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு கொதிகமுவ வீட்டிற்கு அழைத்து வந்தோம். இது தொடர்பில் கடந்த 5ஆம் திகதி காலை அரநாயக்க போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த புகார் மனு மீதான விசாரணை வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. கடந்த 5ஆம் திகதி மாலை மருமகனும் இரண்டு பிள்ளைகளும் சைக்கிளில் கொதிகமுவவில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்தனர். சாப்பிட்டு சந்தோசமாகவே இருந்தனர்.

மாலையில் மருமகன் இரண்டு குழந்தைகளுடன் செல்ல ஆயத்தமானார். நாளை திரும்பி வரமாட்டேன். குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாததால் அவர் அழைத்து சென்றார். அவரது குழந்தைகளை என்னால் கட்டாயப்படுத்த முடியாது.

அதன்படி, மாலை 05:00 மணியளவில் அவருடன் பிள்ளைகள் சென்றன. இரவு 12.15 மணியளவில் எனது மருமகனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

சைக்கிள் உடைந்து விட்டதால் கெறேஜ் ஒன்றில் விட்டுவிட்டு நடந்தே செல்வதாக மருமகன் கூறினார். பிள்ளைகளுக்கு தூக்கம் வருவதால் இரண்டு குழந்தைகளுடன் கவனமாக இருங்கள் என்றேன். காலையில் வரச் சொன்னார். கடைசியாக நடந்த சம்பவம் இதுவே என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் விலானகம சந்திரரதன தேரர் கருத்து தெரிவிக்கையில்,

இதைப் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனைப்படுகின்றது, பிரச்னை என்றால் பேசித் தீர்த்திருக்க வேண்டும், ஆனால் அப்பாவி குழந்தைகளை பலிஎடுத்து, அனைவரின் உயிரையும் இழக்காமல் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். இந்த திடீர் முடிவுகளால் அப்பாவி குழந்தைகளை பலி எடுத்தது தவறு.” என்றார்.

சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ராகுல கந்தேவத்த உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.