சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! {படங்கள்}

149

இன்றையதினம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான, புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் சி.முகுந்தன் என்பவர் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

சமூகத்தின் மீதான அக்கறை என்ற 7வது கூட்டுறவு கொள்கைக்கு அமைவாக இந்த உதவித்திட்டம் வழங்கும் செயற்றிட்டமானது கடந்த 27.01.2022 அன்று தலைவர் ப.கேசவதாசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வருடா வருடம் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின தலைவர் கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் பொது முகாமையாளர் திருமதி கோ.கிருஷ்ணவேணி, சங்கத்தின் உப தலைவர் திரு.செ.குமாரசிங்கம், சங்கானை பிரதேச செயலர் திருமதி உ.கவிதா, சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான திரு.சி.பரமானந்தராசா, திரு.கா.பார்த்தீபன், முன்னாள் பணியாளரும் நிதி வழங்குனருமான திரு.சி.முகுந்தன், சங்கத்தின் பணியாளர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செயற்றிட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து நடாத்திச் செல்வதற்கு உதவிகளையும், அனுசரணையைமும் வழங்க முற்படுபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொண்டு உதவிகளை வழங்க முடியும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தலைவர் ப.கேசவதாசன் – +94777570531

பொது முகாமையாளர் கோ.கிருஷ்ணவேணி – +94776241493

IMG 20240302 WA0121 IMG 20240302 WA0115 IMG 20240302 WA0114 IMG 20240302 WA0116 IMG 20240302 WA0117

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here