சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு

0
pm modipm modi

PM Modi : மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி.

ஒவ்வொரு ஆண்டும் இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்மையைப் போற்றி வணங்கும் வகையில் இந்த மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் இன்று மகளிர் தினத்தையொட்டி தாய், தங்கை, தோழி, காதலி உள்ளிட்ட பெண்கள் அனைவருக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் தினத்தை இன்னும் சிறப்புற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், மகளிர் தினமான இன்று, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதி சுமை குறையும் என்றும் சிலிண்டர் விலை குறைக்கப்டுவது நமது பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

எரிவாயுவை மிக மலிவு விலையில் தருவதால் குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு அவர்களின் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்கள் எளிதாக வாழ்வதை உறுதிசெய்வதே எங்களின் உறுதிப்பாடாகும் என்றுள்ளார்.

எனவே, பிரதமர் மோடியின்அறிவிப்பை அடுத்து ரூ.918.50 ஆக இருக்கும் சிலிண்டர் விலை ரூ.818.50 ஆக குறைக்கப்படும். சென்னையில் தற்போது 14.2 கிலோ சமையல் சிலிண்டரின் விலை ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி

நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - Tamil Breaking News 24x7சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - Tamil Breaking News 24x7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here