சாந்தனின் இறுதி யாத்திரையில் தாமதம்-மீண்டும் பிரேத பரிசோதனை..!

434

மீண்டும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சாந்தனின் உடல்

முன்னாள் போராளி சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (03) இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதம்

சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர்  செய்தி சேவைக்குத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here