சிம்ம ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

21
சிம்ம ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

சிம்ம ராசி நேயர்களே, இந்த ஆண்டு கலவையான பலன்கள் கிடைக்கும். ஆண்டின் முதல் பாதி மிகவும் சாதகமாக இருக்காது ஆனால் பின் பாதியில் மிகவும் சாதகமாக இருக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் உங்களின் 6ம் வீட்டில் தங்கி எதிரிகளைத் வெல்ல வழி வகுப்பார், அனால் அவர்களால் உங்களை ஒரு போதும் வெல்ல முடியாது, இருப்பினும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் தங்கி நிதி சிக்கல்களை ஏற்படுத்துவார்.

ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எந்தவொரு பெரிய வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சிக்கல் இருக்கலாம்.

ஆகஸ்ட் முதல், படிப்படியாக நிலமை மாறி உங்களுக்கு வெற்றியைத் தரும். அக்டோபர், நவம்பரில், உங்கள் எதிர்காலத்திற்கான சில வெற்றிகரமான திட்டங்களை நீங்கள் செய்ய முடியும் மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதி 8ம் வீட்டில் ராகு வரும்போது ​​​​குரு மட்டும் 9ம் வீட்டில் இருக்கும் போது ​​​​நீங்கள் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். ஆனால் எட்டாம் வீட்டில் ராகு திடீர் நிதி இழப்பு மன உளைச்சல் அல்லது உடல் உபாதைகள் ஏற்படலாம் எனவே இந்த நேரத்தில் கவனமாக இருக்கவும். இந்த ஆண்டு பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும்.

சிம்ம ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா விதத்திலும் சவாலாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடந்த ஆண்டு நடக்காமல் இருந்த முக்கிய காரியங்கள் இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இருக்காது.

எதிர்பார்த்த பணம் கைக்கு வர சிறிது தாமதமாகும். பொருளாதார நிலை சீராக இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை முன் வந்து ஏற்றுக்கொள்ளவும். உடன்பிறந்தோர் உதவியாய் இருப்பர். நட்பு வட்டம் விரிவடையும். வேற்று மதத்தவர் கூட நண்பர்கள் ஆவார்கள்.

குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். உறவினர்களிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. உங்கள் வாழ்க்கை தரம் உயரும். உங்கள் மனதிற்கு சரி என பட்டதை உடனே செய்யவும். குடும்பத் நிர்வாகத்தில் உங்கள் திறமை முழுவதும் வெளிப்படும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும்.

பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தை தருவதாகவே இருக்கும். புது வீடு கட்டும் பணி தொடரும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணம் வரும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அடுத்தவரின் கருத்து, ஆலோசனைக்கு செவி சாய்த்து, அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஏற்கனவே முடிவு செய்த திருமண ஏற்பாடுகள் இந்த வருடம் தொடரும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். புதிய வீடு, மனை, சொத்து வாங்கும் போது கவனம் தேவை. சனி கிரகத்தின் பார்வை இருப்பதால் தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும். உத்யோகத்தில் கவனமாக பணியாற்றுவது அவசியம்.

உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்சனை வந்து போகும். தொழில், வியாபாரத்தில் அந்தஸ்து, கௌரவும் உயரும். தொழில், வியாபாரத்தில் விருப்பமானதை செய்ய முடியும். இந்த ஆண்டு பல புதுமைகள் நிறைந்த ஆண்டாக அமையும்.

குறிப்பு : இந்த 2023ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.