ஞானசார தேரர் வைத்தியசாலையில்  – In the present day Jaffna Information

4
ஞானசார தேரர் வைத்தியசாலையில்  - In the present day Jaffna Information - Tamil Breaking News 24x7

4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

Earlier articleமாலைத்தீவு வறட்சிக்கு உதவ முன்வரும் சீனா
Subsequent articleசிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here