தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.!

1
தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.! - Dinamani news

Puducherry: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் போராட்டக் களமாக மாறியுள்ளது புதுச்சேரி மாநிலம். புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் தான் கொல்லப்பட்டது என அம்பலமாகியுள்ளது.

READ MORE – தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.!

இச்சம்பவம் தொடர்பாக, கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது உயிரிழந்துவிட்டதாகவும் இதனையடுத்து சடலத்தை சாக்குப் பையில் போட்டு கால்வாயில் வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளனர்.

READ MORE – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலைவிவகாரத்தில், நீதி வழங்கக்கோரியும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்றுதிரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்புசட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததால், இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

READ MORE – இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர்

இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன, புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டத்தில் மாணவ அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், மாணவ அமைப்பினர் தற்போது கடற்கரையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The publish தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here