தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அனுமதி! – At present Jaffna Information

5
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அனுமதி! - At present Jaffna Information - Tamil Breaking News 24x7

தேசிய ரீதியில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனை திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய தற்போதைய குறைந்தபட்ச சம்பள தொகையான 12 ஆயிரத்து 500 ரூபா 17 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர்களுக்கான நாட்கூலி தொகை 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்கூலி 500 ரூபாவில் இருந்து 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமற்றும் நடுத்தர நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட துணைக்குழுவினால் சம்பள உயர்வுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே விசேட வர்த்தக வரி சட்டத்தை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வரி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் கருத்திற்கொண்டு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 64 வகையான பொருட்கள் இவற்றுள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here