Home Anuradapura news தோண்டிய புதையலை எடுக்க நரபலிக்காக சிறுமியை வசியம் செய்து கடத்தியவர் மாட்டினார்

தோண்டிய புதையலை எடுக்க நரபலிக்காக சிறுமியை வசியம் செய்து கடத்தியவர் மாட்டினார்

168

இன்று காலை இக்கிரிகொள்ளாவ என்னும் கிராமத்தில் யாசகம் பெறுவது போன்று சென்ற ஒருவர் வீட்டில் யாசகம் பெற்றுவிட்டு வீட்டில் உள்ள ஒரு பெண் பிள்ளையை கண்டு உடனே அப்பிள்ளையின் தாயிடம் உங்கள் மகளுக்கு செய்தான் ஒன்று தொற்றி உள்ளது நான் அதை குர் ஆன் ஓதி விரட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தாயாரும் வயது முதிர்ந்தவரின் தோற்றமும் குர் ஆன் ஒதளையும் நம்பி தனது 16 வயது மகளுக்கு ஒதுமாறு கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த 16 வயதே ஆன பெண் பிள்ளை அவர் சென்ற திசையை நோக்கி செல்கின்றதை ஒரு சிலர் அவதானித்தனர்.

அந்த பிள்ளையிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு தெளிவான பதில் அந்த பிள்ளையிடம் இல்லை.

குடும்பத்தார் அவதானித்த உடன் மேலும் இருவர் கார் ஒன்றில் வந்து இந்தப் பிள்ளையை ஏற்றுவதற்கு தயார் நிலையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

உடனே ஊர் வாலிபர்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் இவர் ஒரு மந்திரவாதி என்றும் காரில் வந்தவர்கள் இவருடன் சேர்ந்து ஒரு புதையல் தோண்டியதும், குடும்பத்தில் மூத்த பிள்ளையொன்றை நரபலி கொடுப்பதற்க்காக இந்த பிள்ளையை வசியம் செய்து அவர்களின் காட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உடனடியாக கிராம மக்கள் இவர்களை மாதவாச்சி police நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் தோண்டிய புதையலை பார்வை இட்டனர்.

அவர்கள் புதையலை தோண்டி கையால் எடுக்கும் அளவில் வேலையை முடித்து விட்டு நரபலி கொடுக்கும் கட்டத்தில் சகல ஏற்பாடுகளும் நிறைவிலே இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

Previous articleமஹரகமவில் தீ விபத்து.!
Next articleஜனாதிபதித் தேர்தலே முதலில்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here