நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!

3
நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.! - Dinamani news
நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.! - Dinamani news

Ajith Kumar: நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தனது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித்குமார் சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வீடு திரும்புவார் என அஜித்குமார் மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கெளதம்

நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.! - Dinamani newsநடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.! - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here