நபர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை – At this time Jaffna Information

2
நபர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்திக் கொலை - At this time Jaffna Information - Tamil Breaking News 24x7

கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Earlier articleவாட்ஸ்அப் அசத்தல் அம்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here