நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!

107
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..! - Dinamani news

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது.

நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் நேற்று 01.03.2024 காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது.

இப் பகுதியில் சற்று காற்று பலமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது.

இத் தீயினால் 20 ஹெலிகாப்டர் டேப்பன் டைன் வன பகுதி அழிந்து உள்ளது.

அந்த வனப்பகுதியில் இருந்த வன ஜீவராசிகள் மற்றும் பறவைகள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது அத்துடன் அப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஊற்றுக்களும் வற்றி போகும் நிலை தோன்றியுள்ளது இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர் நோக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here