நாட்டில் அமுலுக்கு வரும் சட்டங்கள்!

2

  நாட்டில் மேலும் ஐந்து சட்டங்கள் அமுலுக்கு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அதன்படி நாடாளுமன்றத்தில் அண்மைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) சபையில் அறிவித்தார்.

பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தம்), ஈடு (திருத்தம்), நிதிக் குத்தகைக்கு விடுதல் (திருத்தம்), உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) மற்றும் கம்பனிகள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களையே சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கமைய, குறிப்பிட்ட சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டம், 2024ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க ஈடு (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடுத்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்த) சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க கம்பனிகள் (திருத்த) சட்டம் எனும் பெயரில் நேற்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

The put up நாட்டில் அமுலுக்கு வரும் சட்டங்கள்! appeared first on Right now Jaffna Information – Jaffna Breaking Information 24×7.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here