நாளை திரைக்கு வரும் 6 தமிழ்ப் படங்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்…

2
நாளை திரைக்கு வரும் 6 தமிழ்ப் படங்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்… - Dinamani news

Tamil Motion pictures: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தென்னிந்திய சினிமாவின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் போட்டி போடு திரைப்படங்களை களமிறக்குவர். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது நாளை மார்ச் 8 ஆம் தேதி 6 தமிழ்ப் படங்கள் வெளியாகிறது.

அதன்படி, பா.ரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடித்துள்ள ‘ஜே பேபி’, ஹன்சிகாவின் ‘கார்டியன்’, ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள ‘சிங்கப்பெண்ணே’, ‘அரிமாபட்டி சக்திவேல்’, அறிமுக நடிகர்கள் நடித்துள்ள ‘நல்ல பேரை வாங்க – வேண்டும் பிள்ளைகளே’, ‘டெவில் ஹன்டர்ஸ்’ என 6 தமிழ்ப் படங்கள் நாளை திரைக்கு வருகின்றன. அது குறித்து ஒரு பார்வை பார்க்கலாம்…

READ MORE – ராதிகா கன்னத்தில் பளார் என அறைந்த விஜயகாந்த் ! காரணம் என்ன தெரியுமா?

ஜே பேபி

இயக்குனர் சுரேஷ் மாரி எழுதி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜே பேபி‘ படம் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் பற்றி விவரிக்கும் ஒரு குடும்ப கதையாகும்.

டோனி பிரிட்டோ இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த் மற்றும் அஷ்வினி சௌதாரி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் நாளை (மார்ச் 8ஆம் தேதி) வெளியாகிறது.

READ MORE – ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்!

கார்டியன்

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாக்கியுள்ள ‘கார்டியன்‘ படத்தை சபரி மற்றும் குருசரவணன் இயக்கியுள்ளனர். நாளை (மார்ச் 8 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ராஜேந்திரன் மற்றும் தங்கதுரை ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்டியன் படத்தை விஜய் சந்தர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

READ MORE – ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்!

சிங்கப்பெண்ணை

நடிகைகளை ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடித்த ‘சிங்கப்பெண்ணை‘ ஜேஎஸ்பி சதீஷ் இயக்கியுள்ளார். குமரன் சிவமணி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். மேலும், இந்த படத்தில் ஏ வெங்கடேஷ், பிரேம், எம்.என்.தீபக் நம்பியார் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர். பெண்களின் மையமாக வைத்து விளையாட்டு  திரைப்படமாகும்.

அரிமாபட்டி சக்திவேல்

இயக்குனர் கரு.பழனியப்பன் முன்னாள் உதவியாளரான ரமேஷ் கந்தசாமி, நடிகர்கள் பவன் கே மற்றும் மேகனா எல்லன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘அரிமாபட்டி சக்திவேல்‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மணி அமுதவன் இசையமைக்க, ஜேபி மேன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ள பவன் கே முக்கிய வேடத்தில் நடிக்க, மேகனா எல்லன் கதாநாயகியாக நடிக்கிறார்.

நல்ல பேரை வாங்க – வேண்டும் பிள்ளைகளே

இயக்குனர் பிரசாத் ராமர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ள ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே‘ படத்தில் ப்ரீத்தி கரண், செந்தூர் பாண்டியன், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். பூர்வா புரொடக்ஷன்ஸ், தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரதீப் குமார் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

The submit நாளை திரைக்கு வரும் 6 தமிழ்ப் படங்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்… first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here