நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை! – As we speak Jaffna Information

3
நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை! - As we speak Jaffna Information - Tamil Breaking News 24x7

இலங்கையில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த விசேட பேருந்து சேவை நாளையதினம் (05-04-2024) முதல் இடம்பெறவுள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

இதன்படி, பண்டிகை காலத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்றையதினம் அறிவித்திருந்தமையும் சுட்டிகாட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here