Home Ampara news நீண்ட காலமாக போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது

நீண்ட காலமாக போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது

28

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று புதன்கிழமை (25) இரவு – காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபரை 500 போதை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர் அம்பாறை – திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவராவார். அவர் வசமிருந்து 500 போதை குளிசைகள் உட்பட, அவர் பாவித்த கைத்தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் சான்றுப் பொருட்களுடன் சந்தேக நபரை – காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக அதிரடிப்படையினர் பாரப்படுத்தினர்

Previous articleதமிழ்நாட்டு முகாம்களில் “நாடற்றவர்களாக” இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப் பரிந்துரை
Next articleA.L.S.X Recreation Evaluate | Freeappsforme