படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த்?

1
படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த்? - Dinamani news

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் நடிகராக பட்ட அவமானங்களை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு பல கஷ்டங்களை தாண்டி தான் அவர் முன்னணி நடிகராக மாறினார். எல்லா நடிகர்களை போலவே இவருக்கும் தோல்வி படங்கள் எல்லாம் அமைந்ததும் உண்டு. ஆனால், அந்த தோல்விகளில் இருந்து எப்படி மீண்டும் வரவேண்டும் என்பதை யோசித்து மக்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகராகவும் வளர்ந்தார்.

இந்நிலையில், ஒரு காலத்தில் தொடர்ச்சியாக படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்த காரணத்தால் சற்று மனம் முடிந்து போய் மற்றோரு படத்தின் படப்பிடிப்பில் நான் நடிக்கவே வரல விடுங்க என்று கூறிய சம்பவம் ஒன்றை தான் அவரை வைத்து பூந்தோட்ட காவல்காரன்,காவல் நிலையம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் செந்தில் நாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

learn more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

அந்த சம்பவம் குறித்து பேசிய இயக்குனர் செந்தில் நாதன் ” ஒரு கட்டத்தில் விஜயகாந்த் நடிப்பையே மறந்து வேறு மாதிரி இருந்தார். அந்த சமயம் நான் எஸ்.ஏ,சந்திரசேகர் சாருடன் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டு இருந்தேன். அப்போது விஜயகாந்த் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த காரணத்தால் அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை ஒரு ஆண்டுகளுக்கு மேல் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

பிறகு தான் அவருக்கு எஸ்ஏசந்திரசேகர் சார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்திலும் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துவிட்டு நடிக்கவும் வந்தார். ஆனால், அவரால் நடிக்கவே முடியவில்லை எதோ ஒன்று அவரை தடுத்தது அவருடைய முகத்தில் தெரிந்தது. பிறகு சுற்றி அணைத்து பக்கங்களிலும் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

learn more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

தொடங்கிய அடுத்த நிமிடமே வேண்டாம் நான் வரவில்லை நிறுத்துங்கள் என்று கூறிவிட்டார். பிறகு அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டோம். பிறகு என்னாச்சு உங்களுக்கு என்று அவரிடம் பேசினோம். சிறிது நேரத்தில் வசன பேப்பரை வாங்கி கொண்டு கண்ணாடி முன்பு நடித்து பழகி கொண்டு இருந்தார். ஆனாலும் அவரால் முழுவதுமாக பழைய மாதிரி நடிக்க முடியவில்லை.

பிறகு தயாரிப்பாளர் அவருக்கு நடிப்பு மறந்துவிட்டது திரும்பி வருவது சற்று கடினம் தான் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டார். பின் விஜயகாந்த் எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். நானும் தயாரிப்பாளரிடம் பேசி பார்த்தேன் ஆனால், தயாரிப்பாளர் அதெல்லாம் எப்படி செட் ஆகும்? அவருக்கு நடிப்பே வரவில்லை என்று கூறிவிட்டார்.

learn more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

பின் எப்படியோ பேசி ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுத்தார். விஜயகாந்தும் கேட்டது போல அடுத்த நாள் காலையிலேயே விரைவாக வந்து படப்பிடிப்பு தளத்தில் காத்திருத்தார். அன்று தான் விஜயகாந்த் பழைய நிலைமைக்கு திரும்பி மீண்டும் பழைய விஜயகாந்த் மாதிரி நடித்தார். படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அவரை பாராட்டினார்கள். இப்படி பல விஷயங்கள் விஜயகாந்த் உடைந்து கஷ்டங்களை அனுபவித்து தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்” எனவும் இயக்குனர் செந்தில் நாதன் கூறியுள்ளார்.

The submit படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த்? first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here