பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை! – In the present day Jaffna Information

4
பதவி நீக்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை! - In the present day Jaffna Information - Tamil Breaking News 24x7

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில்  இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக துமிந்த திஸாநாக்க மற்றும் லசந்த அலகியவண்ணவுடன் இணைந்து சட்ட  நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும்,  பொருளாளர் பதவியில் இருந்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவும் மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் இன்று நீக்கப்பட்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Earlier articleமியன்மாரில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here