பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!..

2
பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!.. - Dinamani news

1952ல் கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம் பராசக்தி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படம். இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வெள்ளி விழா கண்டது. படத்தின் அபார வெற்றிக்கு யார் காரணம் என்று பார்ப்போம்.

சிவாஜியா, கருணாநிதியா, கிருஷ்ணன் பஞ்சுவா என்று நமக்கு கேள்வி எழுகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் திலகத்தின் நடிப்பு தான் முக்கிய காரணம். அடுத்ததாக கருணாநிதியின் வசனமும், கிருஷ்ணன் பஞ்சுவின் துணிச்சலும் என்று சொல்லலாம். அதே போல பெருமாள் முதலியார், மெய்யப்ப செட்டியாரின் தைரியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கருணாநிதியின் வசனத்தில் எம்ஜிஆருக்குத் தான் பல படங்கள் ஹிட். ராஜகுமாரி தான் எம்ஜிஆர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம். அதற்கு வசனம் எழுதியது கலைஞர் தான்.

தொடர்ந்து அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி என பல படங்களும் சூப்பர்ஹிட் ஆனது. இவை எல்லாவற்றிலும் என்ன ஒரு ஒற்றுமை என்றால் எல்லாமே அரசர்கால படங்கள்.

பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!.. - Dinamani news

Manohara

ஆனால் அந்தப் படங்களின் வசனங்கள் நம் மனதில் எதுவும் பதியவில்லை. ஆனால் சிவாஜி நடித்த பராசக்தி மட்டும் நெஞ்சில் நிலைத்து விட்டது. அதற்கு காரணம் சிவாஜியின் அசுரத்தனமான நடிப்பு தான். அதிலும் அந்தப் படத்தின் கோர்ட் சீன் இன்று வரை ஒரு டிரெண்ட் செட் தான்.

வசன உச்சரிப்புகளில் சிவாஜியை மிஞ்ச நடிகர்களில் எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எம்ஜிஆர் மட்டும் இந்தப் படத்தில் நடித்து இருந்தால் இந்த அளவு வரவேற்பு பெற்றிருக்காது. அவரது படங்களைப் பொருத்தவரை சண்டைக்காட்சிகளுக்காகத் தான் அப்போது ஓடியது.

அந்தவகையில் பராசக்தி ஒரு பரிசோதனை முயற்சி தான். அதுவும் பல சமூகக் கருத்துகளைக் கொண்ட படம். இந்தப் படத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் கலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்து இருக்க முடியாது. அதே நேரம் கருணாநிதி, சிவாஜி காம்போவில் வந்த படங்களோ மிகவும் குறைவு தான்.

மனோகரா அப்படி வந்த படம் தான். இந்தப் படத்தின் வசனங்களும் மனதில் பதிய காரணம் சிவாஜி தான். பக்தி படத்தை சொல்ல வேண்டுமானால் திருவிளையாடல். கிராமிய படமா முதல் மரியாதை. வட்டார வழக்குப் படமா தேவர் மகன். இப்படி சிவாஜியின் நடிப்பில் வந்த எல்லா படங்களுமே அவரது நடிப்புக்காகவும், வசன உச்சரிப்புக்காகவும் மட்டுமே ஓடின. கடைசியாக ரஜினியுடன் சேர்ந்து நடித்த படையப்பா படம் கூட அவரை கம்பீரமாக நிற்க வைத்தது என்றால் மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here