பாலகிருஷ்ணாவை பஞ்சராக்கிய படையப்பா இயக்குநர்!.. பாலாவோட கோபக்காரரா இருக்காரே?..

0
பாலகிருஷ்ணாவை பஞ்சராக்கிய படையப்பா இயக்குநர்!.. பாலாவோட கோபக்காரரா இருக்காரே?.. - Dinamani news

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மிகவும் கோபக்காரர் என்பதை பலரும் கூறி கேட்டிருக்கிறோம். ஆனால் பிரபலங்கள் யாரும் வெளிப்படையாக அதுவும் சினிமா விழாக்களில் பாலய்யா பற்றி பேசியது கிடையாது. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் நடந்த ஹன்சிகாவின் கார்டியன் பட விழாவில் பாலகிருஷ்ணா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹன்சிகா நடிப்பில் வரும் மார்ச் 8ம் தேதி பேய் படமான கார்டியன் வெளியாகிறது. அந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் இயக்கி உள்ளனர்.  ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த கூகுள் குட்டப்பா படத்தை இயக்கினர். கே.எஸ். ரவிக்குமார் அந்த படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஓப்பனா ரூமுக்கு கூப்பிட்டா! நான் ஆர்த்டாக்ஸ் ஃபேமிலி.. லட்சுமியுடனான நெருக்கத்தை வெளிப்படையாக கூறிய நடிகர்

இந்நிலையில், கார்டியன் பட விழாவில் பேசும் போது ஒரு சமயம் படப்பிடிப்பின் போது பாலகிருஷ்ணாவுக்கு ஃபேன் திருப்பும் போது அவருடைய விக் லேசாக ஆடியது. அதை பார்த்து சரவணன் சிரிச்சிட்டான். அவ்ளோ தான் பாலய்யாவுக்கு கோபம் வந்துடுச்சு, யாருடா, நீ ஏன் சிரிக்குற என கிட்ட வந்துட்டாரு, எங்கே அடிச்சிடப் போறாரோ என பயந்து நான் அவரிடம் சென்று, சார்.. சார் அவன் நம்ம அசிஸ்டன்ட் தான் என்றேன்.

இல்லை, இவன் ஆப்போசிட் பார்ட்டி, இவன் நம்ம ஆளு கிடையாதுன்னு சொல்லிட்டாரு. அப்படியெல்லாம் கூத்து பண்ணவர் தான் கார்டியன் படத்தை இயக்கி இருக்கார் என கே.எஸ். ரவிக்குமார் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கூஸ்பம்ப்ஸ் கொடுத்த வேறலெவல் பாடல்களின் லிஸ்ட்!.. இதுவரை கேட்காதவங்க இப்ப கேளுங்க!…

இவரது பேச்சைக் கேட்ட பாலகிருஷ்ணா ரசிகர்கள் கே.எஸ். ரவிக்குமாருக்கு எதிராக  பொங்கி வருகின்றனர். தொடர்ந்து பாலகிருஷ்ணா பற்றி சினிமா உலகில் பலரும் பலவிதமான கருத்துக்களை எடுத்து வைத்து வருகின்றனர்.

சமீபத்தில், பாலா மலையாள நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக செய்தி வெளியான போது கூட பாலய்யாவும் பாலாவையும் ஒரு படம் பண்ண வைக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here