பால்மா திருடியது உண்மைதான்… பொலிசார் அழுத்தம் தந்தார்கள்: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பெண்

0
34
பால்மா திருடியது உண்மைதான்… பொலிசார் அழுத்தம் தந்தார்கள்: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பெண்

பொரளை, கோட்டா வீதி பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டிருந்தது.

குறித்த பல்பொருள் அங்காடியின் பணியாளர்கள் குழு ஒன்றினால் பெண்ணொருவர் தாக்கப்பட்டதும், தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த பெண் மேலாடையை களைந்து அரைநிர்வாணமாக நின்றதும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது

கடையில் இருந்த பொருட்களை பெண் திருடியதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டது பின்னர் தெரியவந்தது.

அதன் பிரகாரம் இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட பெண் இன்று (29) பகிரங்கமாக சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பால்மா திருடியது உண்மைதான்... பொலிசார் அழுத்தம் தந்தார்கள்: கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட பெண் - Dinamani news - பால்மா திருடியது,  பால்மா திருடியது உண்மைதான்,  கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில்

கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று பொலிசார் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார்.

“பல்பொருள் அங்காடிக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம் என பொலிசார் தெரிவித்தனர். எதுவும் சொல்லாதீர்கள் அவர்களிடமிருந்து 50000 அல்லது 1 லட்சம் கிடைக்கும் என்று சொன்னார்கள். நான் அடையாள அணிவகுப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அவர்களை அடையாளம் காண வேண்டாம் என்று என்னிடம் கூறப்பட்டது.

அவர்களிடமிருந்து நிறைய வாங்கலாம் என்றும் கூறினர்.

ஊடகங்கள் ஒவ்வொன்றாகச் சொல்லும், அவற்றை நம்பாதீர்கள்.

நான் தாக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அட்மிட் ஆக போவதாக சொன்னேன். அப்படி செய்ய வேண்டாம், இல்லாவிட்டால் எல்லா அப்பாவி பெண்களும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று சொன்னார்கள். விட்டுவிடச் சொன்னார்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. என் கணவர் சிறையில் இருப்பதால் எனக்கு உதவ யாரும் இல்லை. நான் பஸ்ஸில் கூட பிச்சையெடுத்தேன். குழந்தைகள் குடிக்க பால்மா கேட்டனர். ஆனால் பலர் அந்தத் தவறான விஷயங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

நான் அந்த அங்காடியிலிருந்து பால்மா பைக்கட் திருடினேன் என்பது உண்மைதான். அப்போது என்னிடம் பணம் இல்லை. குழந்தைக்கு மாவு தேவைப்பட்டது, அதனால் நான் பால்மா திருடினேன். பால்மா திருடியது  உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தவறு செய்ததற்காக என் நடத்தையை பொய்யாக சித்தரித்தது தவறு. நான் போதைக்கு அடிமையானவள் அல்ல. தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புங்கள், நான் எந்த போதைமருந்தும் பயன்படுத்துவதில்லை“- என்றார்.

Auto Draft-oneindia news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here