புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை… 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை!

1
புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை… 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை! - Dinamani news

Inventory market : முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது.

கடந்த வாரம் பெரும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வாரம் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, இந்த வாரம் ஆரம்பம் முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் பெரும் நிம்மதியாக உள்ளனர்.

Learn Extra – Gold Value : 2-வது நாளாக உயரும் தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?

அதிலும் குறிப்பாக, இன்றை வர்த்தகத்தில் சென்செஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் உயர தொடங்கின.  அதில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனையை படைத்துள்ளது.

Learn Extra – Petrol Diesel Value : விலையில் மாறாமல் நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை ..! இன்றைய (06-03-2024) நிலவரம் என்ன ..?

அதன்படி, 355 புள்ளிகளுக்கு சரிந்த சென்செக்ஸ் இன்று பிற்பகலில் 474 புள்ளிகள் உயர்ந்து 74,151 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தக நேரம் முடிவில் உள்நாட்டு சந்தை அளவுகோலான மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்வுடன் 74,086 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Learn Extra – ராமேஸ்வரம் கஃபே.! குற்றவாளியை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.!

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி முதல்முறையாக இன்று 22,490 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஒரு கட்டத்தில் 131 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஆனால், முடிவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

The submit புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை… 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here