பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்?

3
பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்? - Dinamani news
பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்? - Dinamani news

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் சம்பளம் வாங்காமலும் நடித்து இருக்கிறார். சில படங்களில் அட்வான்ஸ் கூட வாங்கி கொள்ளாமல் படம் முடித்த பிறகு சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதனை அவருடன் பல படங்களில் ஒன்றாக பணியாற்றிய பிரபலங்கள் பலரும் கூறி நாம் பார்த்திருப்போம். அப்படி தான் பிரபல தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் செய்த விஷயம் ஒன்றை பற்றி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சந்திரபிரகாஷ் ” கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் பாதி படங்களில் அட்வான்ஸ் தொகை வாங்காமல் தான் நடித்து இருக்கிறார். அவர் அட்வான்ஸ் வாங்கியது ஒரே ஒரு காரணத்துக்காக தான். அதில் இருந்து தான் விஜயகாந்த் தான் நடிக்கும் படங்களுக்கு அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்தார்.

எதற்காக என்றால் அவர் நடிப்பில் வெளியாகவிருந்த காவிய தலைவன் படம் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. அந்த சமயத்தில் பணம் இருந்தால் அந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற சூழ்நிலை இருந்தது. எனவே, விஜயகாந்த் எனக்கு போன் செய்து என்னிடம் 50 லட்சம் அட்வான்ஸ் வேண்டும் இருந்தால் கொடுங்கள் நாம் உடனடியாக படம் பண்ணலாம் என்று கூறினார்.

அவர் அப்படி அட்வான்ஸ் கேட்ட காரணமே அந்த காவிய தலைவன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு தான். ஆனால் என்னிடம் பணம் இல்லாத காரணத்தால் நான் இல்லை என்று கூறிவிட்டேன். பிறகு வேறு படத்தில் நடிக்க கமிட் ஆகி அந்த பணத்தை வாங்கி தான் காவிய தலைவன் படத்தின் ரிலீஸ்க்கு பெரிய உதவி செய்தார்” எனவும் சந்திரபிரகாஷ் கூறியுள்ளார். விஜயகாந்த் செய்த இந்த உதவி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பால முருகன்

நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

பெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்? - Dinamani newsபெரிய விஷயம் செய்த கேப்டன் விஜயகாந்த்? - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here