பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வது சமூகப் பொறுப்பாகும் – யாழ்.அரச அதிபர்..!

0
3

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்
மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்று நோய் எற்பட்டிருந்தது. அதில் பல உயிரிழப்புக்களாலும், ஏனைய தாக்கங்களாலும் மனிதர்களின் மனங்களிலும் கஷ்ட சூழ்நிலை காணப்பட்டதுடன் பொருளாதார நெருக்கடியும் எற்பட்டிருந்தது. எனவே இதனை கடந்து வந்த எமது அரசாங்கம் புதிய உத்திகளுடனான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதிலும், உணவு உற்பத்தியிலும், ஏற்றுமதி விவசாயத்திலும் முன்னேற்றம் காணவேண்டியதாக இருக்கின்றது. பாரம்பரிய சிறுதானிய உற்பத்தியிலும் உள்ளூர் உணவுப் பொருட்கள் மேம்படுத்தப்பட வேண்டும்.ஏற்றுமதியில் நவீன மயமாக்கும் சிந்தனையாளர்களை வளர்க்கவேண்டும்.

எனவே எமது நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தில் இருந்து 77 ஆவது சுதந்திர தினத்திலாவது இந்தத் திட்டங்கள் அனைத்தும் கிராம மட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்படவேண்டும். அதுவே எமது இலக்கு அதன் ஊடாக ஒரு சுபீட்சமான வாழ்க்கையினை காணமுடியும் என்றார்.

Auto Draft-oneindia news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here