மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்!

1
மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்! - Dinamani news

Sarath Kumar : வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணியில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு என விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஐக்கியமான நிலையில், தற்போது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் கைகோர்த்துள்ளது.

Learn Extra – சனாதன சர்ச்சை… உதயநிதிக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்.28ம் தேதி என்னை நேரில் சந்தித்து, நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று மீண்டும் பாஜக குழு என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Learn Extra – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.!

அதன்படி, இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது. இதனிடையே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை தனக்கு வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்திருந்தனர்.

Learn Extra – சாத்தான்குளம் வழக்கு.! சிறையில் இருக்கும் முன்னாள் காவலருக்கு ஜாமீன்.!

அதனடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடிபாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன் என்றும் மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

The publish மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் கைகோர்த்தார் சரத்குமார்! first appeared on Dinasuvadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here