மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரை தட்டி தூக்கிய கோலிவுட் ஹீரோ!.. இதுக்கு பின்னாடி ஒரு கணக்கு இருக்காம்!..

1
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரை தட்டி தூக்கிய கோலிவுட் ஹீரோ!.. இதுக்கு பின்னாடி ஒரு கணக்கு இருக்காம்!.. - Dinamani news

கடந்த ஒரு வாரமாகவே சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் திரைப்படமாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் மாறியிருக்கிறது. மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம் குணா படத்தின் படப்பிடிப்பு நடந்த கொடைக்கானல் குகையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது.

அதாவது கேரளாவிலிருந்து நண்பர்கள் 10 பேர் ஜாலியாக காரை எடுத்துக்கொண்டு போக அப்படியே குணா குகைக்கு போகிறார்கள். அங்கு குழியில் நண்பர் ஒருவர் விழுந்துவிட அவர் என்ன ஆனார்?.. நண்பர்கள் அவரை காப்பாற்றினார்களா? என்பது பற்றித்தான் படம் பேசுகிறது.

இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..

அதோடு, இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் குணா படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலையும் பயன்படுத்தி உள்ளனர். காதலுக்காக எழுதப்பட்ட அந்த பாட்டு நட்புக்காக மாறி தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து 15 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. உலக அளவில் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இப்போது தமிழகத்திலும் இப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், இப்படத்தை பார்த்த கமல்ஹாசன் இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி பேசி குணா படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: ஷங்கர்கிட்ட இன்னமும் அது இருக்கானு தெரியல! இருந்தால் நல்லது.. நாசர் சொன்ன சீக்ரெட்

மறுபக்கம், நடிகர்கள் தனுஷ் மற்றும் விக்ரம் இருவரும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி பேசிய புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், சிதம்பரத்தின் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை தமிழ் சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்து வரும் மதுரை அன்பு செழியன் தயாரிக்கவுள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரை தட்டி தூக்கிய கோலிவுட் ஹீரோ!.. இதுக்கு பின்னாடி ஒரு கணக்கு இருக்காம்!.. - Dinamani news

மதுரை அன்புவிடம் தனுஷ் சில கோடிகளை கடனாக வாங்கியிருக்கிறார். அதை கழிப்பதற்காகவே சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஹீரோவாக நடிப்பது என அவர் முடிவெடுத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here