Home இலங்கை செய்திகள் மயிரிழையில் தப்பிய மாணவன்

மயிரிழையில் தப்பிய மாணவன்

360

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவன் சகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று மதியம் இடம்பெற்றது.

துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனின் துவிச்சக்கரவண்டி மீது நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மாணவன் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மாணவனின் துவிச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துருந்தனர்.

Previous articleபெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை
Next articleதெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று நாட்டப்பட்டது