மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா…

1
மீனாவுக்கு கிடைத்த பலே ஆஃபர்!… இனிமே முத்து ஆட்டம் வேற லெவலில் இருக்க போகுதுப்பா… - Dinamani news

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா சிட்டியிடம் போய் பேசிய விஷயத்தினை பற்றி முத்துவிடம் கூறுகிறார். நீ எதுக்கு போய் பேசுன அவன் பெரிய ரவுடி. தேவையில்லாம இதை ஏன் நீ செஞ்ச எனத் திட்டுகிறார். உங்களை ஒருத்தன் திட்டிட்டானு போனேன்.

என்னை சொல்லணும். உங்கக்கிட்ட மனுசன் பேச முடியுமா எனக் கூற அப்போ சூல போய் பேசிட்டு வா என்கிறார். இதனால் கடுப்பாகும் மீனா முத்துவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அடுத்ததாக முத்து ஆட்டோவில் சென்று கொண்டிருக்க  மினிஸ்டர் வீட்டில் தன்னுடைய நெருங்கிய நண்பரை சந்திக்கிறார்.

இதையும் படிங்க: 31 குழந்தைங்களுக்கு நான் அம்மா!.. கல்யாணத்துக்கு பிறகும் நான் மாறல!.. ஹன்சிகா ஓப்பன் பேட்டி!..

அவர் முத்துவை அழைத்து சென்று  மினிஸ்டரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 250 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பதாக மினிஸ்டர் கூற அதற்கு சிலர் குறைவதாகவும் கூறுகிறார். மேலும் உன் மனைவியும் வந்து மறுமுறை கல்யாணம் செஞ்சுக்கோங்க எனக் கேட்க முத்து அய்யோ ஆளை விடுங்க என்கிறார்.

அந்த நேரத்தில் ஒருவர் வந்து திருமணத்திற்கு மாலை சொல்லி வைத்திருந்த நபர் காதலித்து ஓடி விட்டதாக கூறுகிறார். இதனால் கடுப்பாகும் மினிஸ்டர் இது எனது கௌரவ பிரச்சனை என்கிறார். முத்துவின் நண்பர் இவன் மனைவி நல்ல மாலை கட்டுவாங்க என அந்த ஆர்டரை மீனாவுக்கு கொடுக்க சொல்கிறார்.

முத்துவும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டு 500 மாலைகளுக்கு 20,000 அட்வான்ஸாக வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார். அண்ணாமலையை அழைத்து அந்த விஷயத்தை கூற அவர் மீனாவிடம் சொல்ல சொல்கிறார். ஆனால் முத்து நீங்களே சொல்லிவிடுங்கள் எனக் கூற மீனாவை அழைத்து அண்ணாமலை இந்த விஷயத்தை கூறுகிறார். பின்னர் இருவரும் கேட்க வேண்டிய கேள்விகளை அண்ணாமலையை நடுவில் நிறுத்தியே கேட்டு அவரை கடுப்பேத்துகின்றனர்.

இதையும் படிங்க: படுத்துக் கொண்டு சொர்க்கத்தை காட்டும் ஸ்ரீதேவி மகள்!.. என்னா பொண்ணுடா என ஏங்கும் பாய்ஸ்!..

அடுத்து மனோஜும் ரோகினியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போ மனோஜ் 14 லட்ச ரூபாயை உங்க அப்பாகிட்ட வாங்கி கொடு எனக்கு கேட்க ரோகினி அதற்கு மறுத்து விடுகிறார்.கனடா வேலை வேண்டாம் என ரோகினி கூற அப்போ பிசினஸ் தான் செய்ய வேண்டும் என்கிறார் மனோஜ்.  அதற்கும் ரோகினியிடமே காசு கேட்க அவர் கடுப்பில் சென்று கொண்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் ரோகினியை வளைக்கும் இரு பேங்க் அதிகாரிகள் 4 லட்சம் காசு வாங்கிட்டு கட்டாம ஏமாத்திட்டு போயிட்ட இனிமே உன்னை நம்ப முடியாது எனத் திட்டுகின்றனர். மனோஜை ரோகினி கணவர் எனத் தெரிந்துக்கொள்ள இருவரையும் ஆதார் கார்டுடன் போட்டோ எடுத்து செல்கின்றனர்.

இதனால் மனோஜ் சந்தேகப்பட்டு என்னவென்று கேட்க வித்யா அம்மாவுக்காக வாங்கினோம். அதை கட்ட முடியாமல் போயிட்டு என்கிறார். நாங்க முடியலைனு தான் வாங்கினோம். அதையும் அசலை கட்டி வட்டி மட்டும் தான் இருக்கு. நாங்க யார் காசையும் எடுத்துக்கிட்டு போய் ஏமாற்றலை எனக் கூற மனோஜ் கடுப்பாகி விடுகிறார். பின்னர் ரோகினி உன்னை சொல்லலை மனோஜ் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: என்ஜாய் எஞ்சாமி பிரச்சனை!.. ஏ.ஆர். ரஹ்மானும் வசமாக சிக்கியிருக்கார்.. சந்தோஷ் நாராயணன் ஓப்பன்!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here