முதல் முறையாக இன்று ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி

3

PM Modi : ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று ஸ்ரீநகர் செல்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ (Article 370) மத்திய அரசு ரத்து செய்திருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வருகிறார். அந்தவகையில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று அங்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஸ்ரீநகருக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதன்பின், ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு 370வது சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, இப்பகுதிக்கு பிரதமரின் முதல் பயணம் இது என்பதால், இன்னும் முக்கியத்துவத்தை பெறுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமரின் எக்ஸ் வலைதள பக்க பதிவில், நான் இன்று (மார்ச் 7) ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளேன். அப்போது, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்புடைய பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here