மெக்டொனால்ட்ஸ் Mcdonalds உணவகங்களுக்கு தடை.!!

2
மெக்டொனால்ட்ஸ் Mcdonalds) உணவகங்களுக்கு தடை.!! - Dinamani news
இலங்கையில் இயங்கி வந்த பிரபல அமெரிக்க உணவகமான மெக்டொனால்ட்ஸ் Mcdonalds நிறுவனத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள அமெரிக்க தாய் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை நடத்த உடன்படிக்கை செய்துள்ள பிரதிநிதி நிறுவனம் சரியான தரத்தில் உணவு மற்றும் பானங்களை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது .

தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் தமது வர்த்தக நாமத்தின் கீழ் உணவு வழங்குவதை நிறுத்துமாறு அதன் தாய் நிறுவனம் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளது .

இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று அமெரிக்க மெக்டொனால்ட் உணவக சங்கிலியை நாட்டில் நடத்தி வந்ததுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அதன் 12 கிளைகளும் மூடப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கிளை ஒன்றில் அதன் பெயர் பலகையை அகற்றும் புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது .

மேலும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பாவனையில் இல்லை என குறிப்பிடுகிறது . இலங்கை இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கூகுள் மேப்பில் தேடும் போது, ​​’தற்காலிகமாக மூடப்பட்டது’ என்ற வார்த்தை காண்பிக்கப்படுகிறது .

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நன்கு அறியப்பட்ட சமைத்த உணவுப் பொருளான McDonald’s இலங்கையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் தமது செயற்பாடுகளை தொடங்கி இருந்தார்கள்

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 12 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை செயற்படுத்த தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமைத்த உணவு விற்பனையில் உலகளவில் புகழ் பெற்ற தனது உணவக சங்கிலியின் பிராண்ட் பெயரில் இயங்கும் உணவகங்கள் ஒப்பந்தங்களின்படி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக McDonald’s தாய் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன்படி, குறித்த உடன்படிக்கையை மீறி தாய் நிறுவனம் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிபதி, மெக்டொனால்ட் உணவகங்களை இயங்க விடாமல் தடுத்து இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறைபாடுகளை குறைத்து தரத்தை பேணுவதற்கான அறிவித்தல்களை தொடர்ந்தும் புறக்கணித்ததன் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் கடந்த 21ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டதாக முறைப்பாடு சார்பில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்தார்.

இணையத்தின் படி, இலங்கையில் உள்ள McDonald’s நிறுவனம் Aban’s Restaurant System, Aban’s இன் துணை நிறுவனமாகும்.

இதன்படி, இதுவரை அபான்ஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த மெக்டொனால்ட் உணவக சங்கிலியை தாய் நிறுவனம் அகற்றுவதுடன், மறு அறிவித்தல் வரை அது தொடர்பான உணவகங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மெக்டொனால்ட்ஸ் Mcdonalds) உணவகங்களுக்கு தடை.!! - Dinamani news மெக்டொனால்ட்ஸ் Mcdonalds) உணவகங்களுக்கு தடை.!! - Dinamani news மெக்டொனால்ட்ஸ் Mcdonalds) உணவகங்களுக்கு தடை.!! - Dinamani news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here