யாழில் பரிதாபமாக உயரிழந்த இளம் ஊடகவியலாளர் விபரீத முடிவெடுத்த தாய்! – At this time Jaffna Information

4
யாழில் பரிதாபமாக உயரிழந்த இளம் ஊடகவியலாளர் விபரீத முடிவெடுத்த தாய்! - At this time Jaffna Information - Tamil Breaking News 24x7

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே நேற்றையதினம் (03-04-2024) வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மகன் உயிரிழந்த தகவலறிந்து அவரது தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

உயிரிழந்த நபர் யாழை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here